till the day i die …
தற்கொலைகள்
காயப்போட கொடிகள் பல இருந்தும், புடவைகளும் , வேட்டிகளும்
மின் விசிறிகளிலும், மாட-கம்பங்களிலும் தலைகளுக்கு போட்ட முடிச்சுகளுடன் காயப்போடபடுகின்றன
ஈரத்திற்கு பதிலாக ஆங்காங்கே ரத்த கரைகள், வாழ்க்கை முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல் !!!
முழுமையாக நினைக்கவோ , உணரவோ முடியவில்லை, அவர்களின் வேதனைகளை
அவர்களின் கடைசி நேர முகபாவங்கள் மனதினில் பிம்பமாவதற்க்குள் மங்கிவிடுகின்றன.
முடிந்தால் தற்கொலையில் இறந்தவர்கள் அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும்
திரும்பவும் வாழ்விப்பதற்காக மட்டுமின்றி, “ஏன்?” என்று மட்டும் கேட்க வேண்டும் எனக்கு
எனக்கும் வருவதுண்டு இவ்வெண்ணம் அவ்வபோது. மரங்களை பார்த்தவுடன் போய் விடும்.
காய்ந்த சருகுகள் கீழே பயனின்றி இருப்பதை பார்ப்பதால்
எந்த முட்டாள் சொன்னானென்று தெரியவில்லை “தற்கொலை கோழைத்தனம் ” என்று
வீரமல்ல என்றாலும் அதற்க்கும் தைரியம் வேண்டும்
அது இல்லாமல் தான் இன்றும் பலர் உயிரோடு இருக்கிறார்கள் , நடை பிணங்களாக
“இங்கே இறந்து கொள்ளலாம்” என்று மட்டும் ஒரு இடம் இருந்தால், எல்லா உறவுகளையும் உதறி
பயண சீட்டு கிடைக்காவிடினும் கூட , நடந்தேயாவது சென்று விடுவர். சட்ட சிக்கல்கள் ஏதும் இல்லை.
குறைந்த பட்சம், தற்கொலைகளை வியாபாரமாக்கும் தின பத்திரிக்கைகள், அச்செய்திகளை அச்சடிக்க மாட்டாமல் இருக்கும்.
ஆச்சர்யமாய் இருக்கிறது, சாலையோர சிப்பந்திகளை பார்க்கும் போது
வாழ்க்கை, அலுத்து கொண்டாலும் , அழகாக தான் வாழ்கின்றனர்.
பட்டினி, உதாசீனம் எல்லாவற்றிற்கும் ‘புன்னகை’ தான் அவர்களின் பதில்.
தற்கொலை செய்து கொள்ள இருக்கும் மக்களே அடுத்த பிறந்த நாள் வரை காத்திருங்கள்
அன்று மட்டும் அவர்களோடு இருந்திடுங்கள், மரங்களை பார்க்க விடினும் மறந்து போயிருப்பீர்கள் உங்கள் எண்ணத்தை !