till the day i die …
மனிதா , நீ இயங்கிகொண்டிரு
அண்ட வெளியில் அற்ப புள்ளியாய் பூமி
அதில் ஊதாமல் பறக்கும் தூசியாய் நாம்
வான் புகழும் , வரலாறும் பூமி புள்ளிகுள்ளேயே மங்கும் வெளிச்சம்
கால சக்கரத்தின் கழற்றி எறியப்பட்ட ஆணி !
உண்மை தான் – எதிலும் உண்மையில்லை என்பது , ஆதலில்
தேடி தொலையாமல், ஓடி ஒளியாமல் – இயங்கி கொண்டிருப்போம் – ஏனெனில்
இயக்கம் தான் மனிதனின் உன்னதம் – முடக்கமல்ல !
விழித்தால் தான் சில தினங்கள் விடியும்
நடந்தால் தான் எதையும் அளக்கவும் முடியும்.
என்ன செய்வாய் நாளை ? என்று யாராவது கேட்டால்!
சொல்! – இயங்கி கொண்டிருப்பேன் இல்லையேல் இறந்து போயிருப்பேன் என்று
June 26, 2010 - 3:29 pm
இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான சிந்தனை. இந்த அவசர உலகத்தில் ஏன்? எதற்கு ஓடுகிறோம் ? போன்ற கேள்விக்கு உண் கவிதை தக்க பதில். மதி அற்று வாழும் மனிதனின் என்னத்தை ” எல்லாம் எனக்கு தெரியும், எனக்கு நிகர் எவரும் இல்லை…”, சாட்டை கொண்டு அடித்துவிட்டது போல் இருக்கிறது. நான் மிகவும் ரசித்த வரி இரண்டாம் வரி.
June 15, 2010 - 9:17 pm
மிகவும் பொருள் நிறைந்த கவிதை . நான் பத்து முறைக்கு மேல் வாசித்துவிட்டேன் . ஓஷோ வைப் போல் உள்ளது உன் சிந்தனை.